Friday, August 21, 2015

நீயில்லா உலகத்தில்...

நிலவே என் உயிர் வாழவே
நீ வேண்டும் அருகினிலே

என் நெஞ்சத்தில் வலி ஏனடி
உன்  சுவாசமே மருந்தாகுமே

நீயில்லா உலகத்தில்
வாழ்வதே பெரும் அவஸ்தையடி

சாகட்டும் உயிர் போகட்டும்
வாழட்டும் என் காதல் மட்டும்

நெஞ்சங்கள் உயிர் வாழவே
நம் காதலே உயிர் மூச்சாகுமா

காதலில் பிரிவை உருவாக்கினாய்
அந்த பிரிவினால் எனை நீ ரணமாக்கினாய்

என்னுள் பூப்பூக்கும் மரமாக வளர்ந்தாயடி
அந்த மரமின்று வேரொடு சாய்ந்ததடி

தோழி, காதலி என்றிருந்தாய்
அந்த உறவு இன்று வெறும் கானல் நீரா
அது ஒரு காதல் கனா…

வாழ்க்கையின் அழகு காதலென்றேன்
அந்த காதலால் என் வாழ்க்கை இழந்தேனடி
பிரிவினாலே உன் பிரிவினாலே

நினைவில் உன்னுடன் பழகியதை விட
கனவில் உன்னுடன் வாழ்ந்தது அதிகம்
அதுவே இனி நிரந்தரமா..

தாயுண்டு தந்தையுண்டு
தன்னந்தனியா நானுமுண்டு

நான் இல்லை அவள் மனதில்
அவள் உண்டு என் மனதில்

அலைபேசி என் உடலின் அங்கமானதே
அவள் குரல் கேட்க

என் உடல் உயிரற்று போனதே
அவள் என்னை வெறுக்க

நேரமில்லா உலகில் தனியாக
தனியாக தவிக்கிறேன் பிரிவில்

உன்னைக் காண நண்பனைக் கழற்றிவிட்டேன்
நீ என்னைக் கழற்றிவிட

நண்பன் என்னைக் காண வந்தான்
ஆறுதல் சொல்ல…

நீயே உலகமென்று இருந்தேன்
இந்த உலகத்தில் நான் யாரென்று கேட்டாய்

என்னை மறந்து உன்னை நினைத்தேன்
உன்னை மறக்க என்னை தொலைக்கிறேன்...

Wednesday, August 19, 2015

கல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...

ஒரு காலத்தில் என்ஜினியரிங் படிப்பு என்பது மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. அதற்கு கல்லூரிகளின் எண்ணிக்கை, கட்டணம், பொருளாதாரம், நுழைவுத் தேர்வு என பல்வேறு காரணங்கள் இருந்தன.

ஆனால்.,

இன்றைய நிலைமையில், தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் படிப்பு என்றாகிவிட்டது. 552 என்ஜினியரிங் கல்லூரிகளை (தமிழ்நாட்டில்) வைத்துக்கொண்டு வருடந்தோறும் இலட்சோப இலட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறோம் . விளைவு, பொறியியல் என்கிற விசயம் அதன் மகத்துவத்தை இழந்து வருகிறது.

கிராமப்புற மாணவர்களும் கூட பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நுழைவுத் தேர்வு நீக்கம், கட்ஃஆஃப் மதிப்பெண் குறைப்பு இவையெல்லாம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள் ! இதன் இன்னொரு பரிமாணம் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.

என்ஜினியரிங் என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்று கூட தெரியாத அளவுக்கு பல ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

ஒருபுறம் கல்லூரிகளில் வளாகத் தேர்வு மூலமாக அனைத்து துறை மாணவர்களையும் (கணிணி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேசண்மேலும் பல துறைகள்) தேர்வு செய்து அவர்களுக்கும் படிப்புக்கும் தொடர்பில்லாத வேலைகளில் அமர்த்துகிறார்கள்.

இது மான்கள், புலிகள், குதிரைகள், பசுக்கள் போன்ற எல்லா விலங்குகளையும் தேர்வு செய்து உங்களுடைய வேலை நரியை போன்று நடிப்பது என்பது போல் உள்ளது. (இது நிறுவனங்களின் தவறு கிடையாது. அவர்களின் தேவை அவ்வளவுதான்.)

மறுபுறம் 5000, 6000 ரூபாய் சம்பளத்துக்கு கால் சென்டர், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேலும் பல படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.

5 இலட்சம் ரூபாய் செலவு (கடன் வாங்கி) செய்து 4 வருடங்கள் என்ஜினியரிங் படித்தவனும், 50,000 ரூபாய் செலவு செய்து 3 வருட டிகிரி படித்தவனும் ஒரே வேலை செய்கிறான்.

இன்னொரு புறம், கிடைக்கும் வேலையை படிப்பிற்கு தகுதி இல்லாத வேலை என்று சொல்லிக் கொண்டும், குறைந்த சம்பளத்திலாவது எதாவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் எத்தனையோ வேலை இல்லா பட்டதாறிகள் நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு கல்லூரிகளையோ, அரசாங்கத்தையோ குறை கூறுவதை விட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தான் குறை கூற வேண்டும்.

மற்ற எல்லா படிப்புகளைப் போல என்ஜினியரிங்கும் ஒரு படிப்புதான். பிறகு ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு பெரிய மோகம்? சிந்தியுங்கள்….  

இந்தியாவில் சில நிறுவனங்களே மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து, உரிய பயிற்சிகளை கொடுத்து அந்தந்த வேலைக்கு தகுந்தவாறு மாற்றுகிறார்கள்.

பெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த வேலைக்கு தேவையான அனைத்து திறமைகளும் (skills) உள்ள பட்டதாரிகளை தான் எதிர்பார்க்குகிறார்கள். ஆட்களை எடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை கொடுப்பதற்கு அந்த நிறுவனங்களுக்கு நேரமும் பணமும் தடையாக உள்ளன.

இந்த நிறுவனங்களின் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்தந்த வேலைக்கு தகுதியான திறமைகள் உள்ள ஆட்கள் கிடைப்பதில்லை.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, நம்முடைய கல்லூரி பாடத்திட்டம் மட்டும் நம்முடைய வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும் வேலைக்கு தேவையான பல திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.

பெரும்பாலான மாணவர்கள் .டி (IT) வேலை என்றால் ப்ரொக்ராம்மிங் (Programming), டிசைன் (Design) சார்ந்த வேலை மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை தவிர .டி இன்டஸ்ட்ரியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. [SEO, Social Media Marketing, Testing, Business analyst, multimedia, L&D, Sales, marketing, Admin, HR, finance.. etc].

இதே போன்றே எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என இதர துறைகளிலும் அறியப்படாத அதே சமயம் ஆட்கள் தேவைப்படும் அநேக கிளைத்துறைகள் இருக்கின்றன.

ஆகவே மாணவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளையும், அதற்கான திறமைகளையும் ஆராய்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சுய திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.



Tuesday, August 18, 2015

Facebook

பல முகங்கள் கண்டேன்
பல முகங்கள் என்னைக் கண்டன

என் நண்பர்களின் பிறந்த நாளை
நினைவூட்டும் ஒரு நல்ல நண்பன்

சாப்பிட மறந்த தருணங்களிலும்
உன்னுடன் நேரம் செலவிட மறக்கவில்லை

போகாத ஊர்களிலும் தேசங்களிலும்
நண்பர்கள் கிடைக்க செய்தாய்

பெற்றோர் வழங்காத கருத்து சுதந்திரத்தை
நீ எனக்கு வழ்ங்கினாய்

நண்பர்கள் அரட்டை என்பதை
நவீனமயமான பொழுதுபோக்காக மாற்றினாய்

மறைமுக வியாபாரம் தொடங்கி
நேர்முக வியாபார ஸ்தலமானாய்

முகம் பார்க்க கண்ணாடி அந்த காலம்
பலர் முகங்கள் தேட facebook இந்த காலம்

ஸ்கூல், காலேஜ் ஃப்ரண்ட்சிப்
படிக்கும்வரை மட்டும் தான் அந்த காலம்
அத லைஃப் லாங்கா மாத்துனது
facebook காலம்

மேரைஜ் இன்விட்டேசனை அட்ரஸ் தேடி
நேரில் சென்று கொடுத்தது அந்த காலம்
அதை ஸ்டட்டஸில் போஸ்ட் பண்ணி
இன்வைட் பண்றது இந்த காலம்

சைட் அடிக்க கொவில், காலேஜ் போனது
அந்த காலம்
சைட் ப்ளஸ் சாட்டிங்னு ஆஃபர் தந்தது ஃபேஸ்புக் காலம்....

கல்லூரி வாழ்க்கை...

எங்கள் வாழ்க்கையில் என்றும் சிறந்தது
எங்கள் கல்லூரி வாழ்க்கை தான்

அதை நினைக்கையில் எங்கள் மனதில்
வான் மழை தூவுதே

கல்லூரி வானிலே நட்சத்திரங்களாய்
பூத்துக்கிடக்கிறோம் நண்பர்களாக…

நட்பு என்ற மூன்றெத்து மந்திரத்தின்
அர்த்தம் புரிந்ததும் இங்கேதான்

ஆண் பெண் நட்பின்
உன்னதம் புரிந்ததும் இங்கேதான்

உணர்ச்சிகளுக்கும் உண்ர்வுகளுக்கும் உள்ள
உறவு புரிந்ததும் இங்கேதான்

ஆசிரியர் நண்பனானதும்
நண்பன் ஆசிரியரானதும்
இங்கேதான்

வெளி உலகத்தை எங்கள் கண்முன்னே
பார்த்ததும் இங்கேதான்

தேர்விற்காக தேர்வறை வாசலில்
தீவிரமாய் படித்ததும் இங்கேதான்

பயத்தின் பயமான தேர்வு முடிவை
எதிர்பார்த்துக் காத்திருந்ததும் இங்கேதான்

மகிழ்ச்சியின் உச்சங்கள்
துயரத்தின் ஆழங்கள்
இவையனைத்தும் சேர்ந்ததே
நட்பென்றானதே…

கல்லூரி என்ற புல்லாங்குழலிலே
காற்றாய் கனவுகளுடன் நுழைகின்றோம்

கனவுகள் நிறைவேற
இசையாய் வெளிவருகிறோம் நண்பர்களாக…

என் இரயில் பயணத்தில்...

என் இரயில் பயணத்தில்
நிலவும் என்னுடன் பயணித்தது
நானோ ஜன்னலோரம்
நிலவோ கண்ணுக்கு எட்டிய தூரம்

கட்டிடங்களும் மரங்களுமே அவ்வப்போது
எங்கள் ஈர்ப்பைக் குறைக்கும் சிறூ வில்லன்கள்
அவர்களும் எங்களுக்கு வழிவிட
பெரு வில்லனாய் வந்தது மேகம்

மேகமும் வழிவிடும் என்ற எண்ணத்தில்
கண்மூடி கனவில் நினைத்தேன்
கண் திறந்த போது
நிலவும் மறைந்தது
எங்கள் ஈர்ப்பும் குறைந்ததும்
விடியலால்….